• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மோகனப் பெருமாள் திருக்கோவில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Oct 18, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலை யூரணி ஊராட்சியை சேர்ந்த கீழதாயில்பட்டி கிராமத்தில் பழமையான மோகனப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், திருநீறு, இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் மோகனப் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாட்டில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.