விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பேச்சு உடைய அய்யனார் கருப்பசாமி , பழமையான கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பொங்கல் திருவிழா தொடங்கியது

முதல் நாள் திருவிழாவில் கொல்லப்பட்டி அரண்மனை சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரண்டாம் நாள் திருவிழாவில் கோட்டையூர், பச்சையாபுரம், ஆசாரி மர்தெரு குழாலர் தெரு, மேல தாயில்பட்டி, பசும்பொன் நகர், உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மூன்றாம் நாளில் மாலை அணிந்த பக்தர்கள் அய்யனார், கருப்பசாமி, வேடமணிந்து பாரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி மற்றும் பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பேச்சு உடைய அய்யனார் பதினெட்டாம்படி கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



