• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சௌடேஸ்வரி அம்மன் கோவிலிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு…

ByK Kaliraj

Oct 10, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமலிங்காபுரத்தில் சௌடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போல் வி.துரைசாமிபுரம் கிராமத்தில் சௌடேஸ்வரி அம்மன் கோவிலிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.