• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்தக்காரர்கள் நல சங்கம் சார்பாக விருதுநகரில் கலந்தாய்வு கூட்டம்..,

ByT. Vinoth Narayanan

Oct 10, 2026

விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்தக்காரர்கள் நல சங்கம் சார்பாக விருதுநகரில் கலந்தாய்வு கூட்டம் தலைவர் எம் ஞானராஜ் மற்றும் செயல் தலைவர் ஜி. மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.. சங்க நிர்வாகி சரவணா குரு வரவேற்புரை வழங்கினார்.

சங்கத்தின் செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.. வரும் காலங்களில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சங்கத்தின் செயல் தலைவர் ஜி மணிகண்டன் உரையாற்றினார். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக கோட்டளவில் நடைபெறும் டெண்டர்கள் ரூ . 50 லட்சம் வரை உள்ள வேலைகளை ரூபாய் ஒரு கோடி வரை உயர்த்தி அந்தந்த மாவட்ட ஒப்பந்தகர்கள் மட்டும் கலந்து கொள்ளும்படி அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

நகர்ப்புற அரசு மருத்துவமனையில் அவசர வேலைகளை நாமினேஷன் முறையில் தற்போது செய்து கொள்ள வழிமுறை உள்ளது.இதை கிராமப்புற மருத்துவமனையில் அவசர வேலைகளுக்கு நாமினேஷன் முறையை கொண்டு வர வலியுறுத்தப்பட்டது.

ஹை கோர்ட் அவசர பணிகளுக்கு நாமினேஷன் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.. அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அவசர வேலைகளுக்கு நாமினேஷன் முறையை அமல்படுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சங்கத்தின் பொருளாளர் ஜி ராமகிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார்.