திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வேடசந்தூர் – கரூர் நான்கு வழிச்சாலையில் விருதலைப்பட்டி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது,

அப்போது பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குப்புசாமி மனைவி ரேவதி(வயது 44) என்பவரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 32 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





