பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் சேவா சங்கல்ப் அபியான் எனப்படும் தூய்மை பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை பாஜக இளைஞர் அணி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.,

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மதுரை மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடை வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.,

இதற்கு முன்னதாக உசிலம்பட்டியின் மையப் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

அதனைத் தொடர்ந்து ஏ. இராமநாதபுரம் முத்து ஊரணியில் ஆலமரம், வேம்பு, புங்கை உள்ளிட்ட சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து பின்பு கல்யாண கருப்பசாமி கோவிலில் என் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் தூய்மை பணியை துவக்கி வைத்தார்.,
இதில் பாஜக இளைஞர் அணி மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.,




