மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூரா ட்சி போடிநாயக்கன்பட்டி கிராமத்தின் சார்பாக கடவு காத்த அய்யனார் கோவில் புரவி எடுப்பு உற்சவவிழா நடந்தது. போடிநாயக்கன்பட்டி மந்தையில் காலை 9 மணிக்கு அய்யனார் குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 10மணிக்கு வாழைப்பழம் சூறை விடப்பட்டது. 10.30மணிக்கு புரவி எடுப்பு ஊர்வலம் புறப்பட்டது.

இதில் சோனை,லாடசன் னாசி, கன்னிமார்கள், குதிரைகள் உள்ளிட்ட ஏராளமானமண் சிலை களை பக்தர்கள் சுமந்தபடி வந்தனர். இந்த ஊர்வலம் பொட்டுலு பட்டி,சந் தை பாலம்,லாலா பஜார், பஸ் நிலை யம்,ஜெமினி பூங்கா, தாதம்பட்டி நீரேத் தான்மந்தை, தாதப்ப நாயக்கன்பட்டி வழியாக விராலிப்பட்டி கண்மாய் கரையில் உள்ள கடவு காத்த அய்ய னார் கோவிலை மதியம் 1 மணிக்கு சென்றடைந்தது.

1.30 க்குகடவு காத்த அய்யனார் பரிவார தெய்வங்கள் மற்றும் வன தேவதைகளுக்கு ஆட்டு கிடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 3.30 மணிக்கு அசைவ விருந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை போடிநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.




