• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரை கூடல் நகர் பாலம் இறக்கத்தில் நிகழ்ந்த விபத்தில், வாலிபர் ஒருவர் பலி.!

ByKalamegam Viswanathan

Oct 9, 2026

​மதுரை பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்ன மருதுபாண்டி (வயது 20) என்பவர், பாத்திமா காலேஜ் கல்லூரி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சின்ன மருதுபாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
​

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓட முயன்ற லாரியையும், அதன் ஓட்டுநரையும் காளவாசல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சந்தானகுமார் அவர்கள் விரைந்து சென்று சாதுரியமாக மடக்கிப் பிடித்தார். ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை உடனடியாகச் சீர்செய்தனர்.
​

தொடர்ந்து, தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.