மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மம்பட்டிபட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,

இந்த நிலையில் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வட்டாட்சியர், கோட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.,
இந்த நிலையில் ஊரணி, கிணறு, விநாயகர் கோவில், பள்ளிக் கூடம், கிராமச்சாவடி, மந்தையம்மன் கோவில்,மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட கிராமத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி 20.08.2026 அன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டது.,

இந்த நிலையில் காலதாமதமானதால் கிராமக்கள் இன்று உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,
மேலும் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் மம்பட்டிபட்டி கிராம மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டு கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.,
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.,


