• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா.,

பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸின் 58-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வேடசந்தூர் அருகே உள்ள குரும்பபட்டியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு திண்டுக்கல் வடக்கு மாவட்ட தலைவர் மு.கணேசன் தலைமை ஏற்று குடகனாற்றின் கரையோர பகுதிகளில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார்.

விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் அ.வைரமுத்து, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், நகர செயலாளர் முனியப்பன் வடக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, தெற்கு கிளை செயலாளர் கார்த்திக் மற்றும் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய ஒன்றியம், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.