திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பள்ளி மாணவிகள் பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் விரைவாகவும்,கூட்ட நெரிசலில்லாமல் சிரமமின்றி செல்வதற்காகவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவிகளுக்காக வெற்றிப் பயணம் பேருந்தை திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் கே.குமரேசன் தலைமையில் த.வெ.க நகர கழக செயலாளர் எம்.குரு அருண் த.வெ.க.
பொறுப்பாளர் ஜெ.கண்ணாயிரம்,

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து கழக கிளை நிர்வாகி ஆர் காளிதாஸ், சி.சரவணன், உள்ளிட்ட த.வெ.கழக நகர நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழக ,மகளீர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பள்ளி மாணவிகளுக்கான வெற்றிபயணத்தை துவக்கி வைத்தனர்.





