• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தவெக அரசின் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் கவலை அடைந்து வருகிறார்கள் ஆர்.பி.உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Oct 9, 2026

தவெக அரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் தற்போது அனைத்து பொருட்களின் விலை விண்ணை மூட்டுகிற வகையில் உயர்ந்துள்ளது .அரிசி மூட்டை க்கு 600 வரை உயர்ந்துள்ளது ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் வரை உயர்வதாக மக்கள் கவலை அடைந்து வருகிறார்கள்.

பருப்பு, எண்ணெய்,சீரகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. விலைவாசி உயர்வு கொடுத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விலைவாசி உயர்வை தொடர்ந்து கண்காணிப்பு படுவதாக சொன்னார்கள். ஆனால் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

ஒருபுறம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த தவெக அரசு தடுமாறி வருகிறது. மறுபுறம் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, அதே போல சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தாத நிலை, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது .

அதேபோல போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, லாக்கப் டெத் மரணத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை இதையெல்லாம் அன்றைக்கு விஜய் குற்றச்சாட்டு வைத்து தான் ஆளுங்கட்சி மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நான்கு மாதங்களில் முதல்வர் விஜய் பொறுப்பேற்று இதற்கு ஏதாவது தீர்வு காண்பார் என மக்களின் நம்பிக்கை இன்றைக்கு தோற்றுப் போய் உள்ளது .குறிப்பாக நாம் விலைவாசி ஒப்பிட்டு பார்த்தால் துவரம் பருப்பு ஒரு கிலோ 120 வரை கிடைத்தது இப்போது 160 வரை விலை உயர்ந்துள்ளது.

உளுந்தம் பருப்பு 120 ரூபாய்க்கு கிடைத்தது தற்பொழுது 140 வரை உயர்ந்துள்ளது. அதேபோல கடலெண்ணெய் 95 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய்க்கு விற்றது தற்போது 190 வரை உயர்ந்துவிட்டது. புளி 150 ரூபாய்க்கு விட்டது இப்போது 230க்கு உயர்ந்து விட்டது பூண்டு 240க்கு இப்போது 310 உயர்ந்து இருக்கிறது

சர்க்கரை 40 ரூபாய்க்கு விற்றது 60 வரை உயர்ந்துவிட்டது .அதேபோல தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தினசரி ஏற்றம் கொண்டு வருகிறது. குறிப்பாக அரிசி வாரம் ஒரு முறை உயர்ந்து வருகிறது .

தமிழகத்தில் கடுமையாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தவெக அரசு ஆட்சி, அதிகாரத்தை வைத்து மக்களுக்கு சேவை செய்து திட்டங்களை கொடுத்து காப்பாற்றும் என்கிற நம்பிக்கை 100 சதவீதம் தோற்றுப் போய் உள்ளதற்கு விலைவாசி உயர்வே சாட்சியாக உள்ளது.

ஆயிரம் ரூபாய் கொணடு இரண்டு வாரங்களுக்கு தேவையான
மளிகை சாமான்கள், காய்கறிகள் வந்த நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் கொண்டு போனால் ஒருநாளுக்கு தேவையானதை வாங்க முடியாமல் பற்றாக்குறையாக ஏற்படுவதை பார்க்கும் பொழுது அரசும் பற்றாக்குறை அரசாக உள்ளது. ஒவ்வொரு வீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு தவெக அரசு காரணமாக அமைந்து வருகிறது.

தன்னுடைய ஆளுமை பலத்தை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது அதை தவறவிட்டாரா முதல்வர் விஜய் என்பதுதான் நமக்கு தெரிகிறது