திருப்பரங்குன்றம் மலை மேல் எடுக்கும் விழா ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் .
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மலை மேல் எடுக்கும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன இந்நிலையில் திருக்கோவில் துணை ஆணையர் செல்வி தொல்லியல் துறைக்கு மலை மேல் நடைபெறும் வேல்விழாவிற்கு அனுமதி வழங்க கோரி கடிதம் எழுதி இருந்தார்.

இதனை தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் மலைமேல் பாரம்பரியமாக நடைபெறும் விழாவிற்கு எந்தவித தடையில்லை எனக் கூறியது. ஆனால் சமையல் செய்ய தடை என கூறப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் கிராமத்தார்களுக்கு சமையல் செய்ய தடை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும் திருக்கோவில் நிர்வாகம் காவல்துறை கிராம பொதுமக்கள் கோவில் சாணிக்கப்பட்டர்கள் இணைந்து மூன்று கட்ட பேச்சு வார்த்தைகளும் எந்தவித நடவடிக்கையும் ஏற்படாததால் மிகவும் பதட்டமான சூழ்நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து கோட்டை தெருவை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் பாஜக சார்பில்மாநில இளைஞர் அணி தலைவர் எஸ் ஜே சூர்யா தொல்லியல் துறைக்கு மேல்முறையீடு செய்தார். அதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை
மலைமேல் வேல் எடுக்கும் விழாவிற்கு எந்தவித கட்டுப்பாடு தடைகள் இல்லை எனக் கூறிய அனுமதி வழங்கியது.
இதனை இந்து சமய அறநிலைத்துறை ஏற்க மறுத்ததால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெறுவதால் அதன் தீர்ப்பு வருவதை ஒட்டி தான் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதியரசர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது . நீதிமன்ற விசாரணையில் முதலில் சமையல் செய்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது
இந்நிலையில் பாண்டியராஜன் தொல்லியல் தொல்லியல் துறை அனுமதி மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற மலைமேல் வேல் எடுக்கும் விழாவில் புகைப்படங்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற நீதியரசர்கள் சென்ற ஆண்டு போல் இந்தாண்டும் விழாவினை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும் மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திர திரன் தலைமையில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கி மலை மேல் எடுக்கும் விழாவினை நடத்தித் தர உத்தரவிட்டனர் .
அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலை துறை மற்றும் போலீசார் மலை மேல் வேல் எடுக்கும் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் கோவிலில் மலை மேல் தீபத்தூண் ஏற்றுவதில் கடும் சர்ச்சை ஏற்பட்டு பல்வேறு சட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது நிலையில் மழை மேல் எடுக்கும் திருவிழாவிற்கும் திடீர் தடை எனவும் கிராம பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் ஆவேசமடைந்தனர்.
இதனால் திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் மலை மேல் எடுக்கும் விழாவில் எந்தவித தடையும் இல்லை என்றதையடுத்து தற்போது இயல்பான சூழ்நிலை நிலவுகிறது.




