• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

‘ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ்’ சார்பில் பிரம்மாண்ட துணை விற்பனையாளர்கள் மாநாடு..,

BySeenu

Oct 8, 2026

​கோவை மேட்டுப்பாளையம் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள எம் இன் விடுதியில், டி.ஐ. சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ் (ஈரோடு மற்றும் கோவை) சார்பில் “எல்லைகளைத் தாண்டிப் பயணிப்போம்” என்ற நோக்கில் சிறப்புத் துணை விற்பனையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​

ஜெமினி சைக்கிள் ஸ்டோர்ஸ் உரிமையாளர் துளசிமணி, நிர்வாகப் பொறுப்பாளர் அர்ஜுனன் மற்றும் கோவை கிளை மேலாளர் சண்முகம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டி.ஐ. சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைவர் பாரதி, மண்டல விற்பனை மேலாளர் வினோத் மற்றும் விற்பனை அலுவலர் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

​வணிகக் கூட்டாளிகளுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், எதிர்கால தொழில் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், பி.எஸ்.ஏ, லேடிபேர்ட், ஹெர்குலஸ், மேக் சிட்டி மற்றும் மோன்ட்ரா உள்ளிட்ட முன்னணி மிதிவண்டி பிராண்டுகளின் வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் துணை விற்பனையாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

மாலை வேளையில் வணிகப் பங்காளிகளுடனான கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் ஆலோசனைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்து உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுற்றது.