திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்ச்சியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

அதிகாலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருந்தது இந்நிலையில் கோவில் நுழைவாயில் சன்னதி தெருவில் அர்ச்சனைக்கு வாங்கி வந்த தேங்காய் பழங்களைகோவில் நிர்வாகம் எனக் கூறி நான்கு நபர்கள் தேங்காய் பழம் உடைத்து பணம் வசூல் செய்தனர்

கோவில் சன்னதி எதிரே சாமி உச்சவத்திற்கு அழைத்துச் செல்லும் வண்டியின் மீது தனி நபர்கள் தேங்காய் உடைத்து கட்டண வசூல் செய்தனர்.
குறைந்தபட்ச கட்டணமாக ஒரு தேங்காய் க்கு 20 ரூபாயும் அதிகபட்சமாக பக்தர்கள் கொடுக்கும் 100 200 ரூபாய்களை கூட பெற்றுக் கொண்டனர்
கோவிலில் உள்ளே அர்ச்சனை சீட்டு மற்றும் அனுமதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக தனி நபர்கள் தேங்காய்கள் உடைத்து வசூல் செய்தது பேசும் பொருளாகி உள்ளது.


