திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்ட பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும் வந்து செல்கிறது..

பேருந்து நிலையத்தின் உள்ளேயே புறக் காவல் நிலையமும் அமைந்துள்ளது. ஆனால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடாததால் திருட்டு பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்களிடம் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் புறக் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள மாநகராட்சி கழிவறைக்கு அருகே ஒரு குடும்பத்தினர் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது ஒரு பாலியல் தொழிலாளி ஒரு ஆணிடம் நைசாக பேச்சு கொடுத்து பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். அப்போது அவரது தாய் தட்டிக் கேட்டபோது அருகில் இருந்த செங்கற்களை எடுத்து தாக்க முயன்றார். இதற்கிடையே பயணி ஒருவர் வீடியோ எடுத்ததை பார்த்ததும் அங்கிருந்த பாலியல் தொழிலாளி தப்பி ஓடினார். இது மட்டுமல்லாமல் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வரும் ஆண்கள் மது குடித்துவிட்டு மயக்கம் அடையும் நிலையில் பெண்கள் புலம்பும் நிலையும் நிலவுகிறது.
எனவே போலீசார் இரவு நேரங்களில் உரிய கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் இந்த தகவல் ஆனது காவல்துறையினருக்கு தெரியப்படுத்தவே பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட முயன்ற பெண்ணை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.




