மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடத்தப்படவில்லை என்றும், இதனால் பொதுமக்களின் அடிப்படை பணிகளை கூட செய்ய முடியாத நிலை நீடிப்பதாக குற்றம் சாட்டியும், நகர் மன்ற கூட்டத்தை நடத்த கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ் என 18 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தில், வெளியில் சென்றிருந்த நகராட்சி பொறியாளர் சசிக்குமார் நகராட்சி அலுவலகம் வந்தவுடன், போராட்டம் நடத்தி வருவதை ஏளனமாக பேசியதாக குற்றம் சாட்டி, அவரை தாக்க முயன்று சேர்களை தூக்கி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,

தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ் இடம் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், கூட்டம் நடத்த இடையூறாக உள்ள நகராட்சி பொறியாளர் சசிக்குமாரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.,
மேலும் வரும் 28 ஆம் தேதிக்குள் நகராட்சி பொறியாளரை மாற்றி விட்டு, நகர் மன்ற கூட்டம் நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில் முதல்வர் மதுரை வரும் 28 ஆம் தேதி அனைத்து வார்டு பொதுமக்களையும் திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துவிட்டு 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.,



