மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாடு தொழிற்சங்க பணியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூபாய் 624 சம்பளத்தை பெற்று தந்ததற்காக நன்றி தெரிவித்து பணியாளர்கள் கூட்டம் சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.

மாநில செயலாளர் கரும்பாலை போஸ் தலைமை தாங்கினார் மாநிலத் துணைச் செயலாளர் நெடுஞ்செழியன் மோகன் காமராஜ் வேல்முருகன் சோழவந்தான் தொகுதி மாவட்ட அமைப்பாளர் மு காளிமுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழாளன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஊர்சேரி சிந்தனை வளவன் சோழவந்தான் நிர்வாகிகள் மருது பாண்டியன் வடிவேலு ரங்கசாமி மூர்த்தி பழனியம்மாள் ஜனக மாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கும் சம்பள உயர்வு பெற்று தந்த துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.





