• Wed. Nov 11th, 2026

அரவான் திருவிழாவை முன்னிட்டு தேமுதிக சார்பில் அன்னதானம்..,

BySeenu

Nov 11, 2026

கோவை சிங்காநல்லூரில் உள்ள அரவான் திருவிழாவை முன்னிட்டு தேமுதிக சார்பில் 10 ஆம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது.

கோவை மாநகரில் உள்ள சிங்காநல்லூரில் பிரசித்தி பெற்ற அரவான் திருவிழாவை முன்னிட்டு தேசிய முற்போக்கு* திராவிட கழகம் கோவை மாநகர மாவட்டம் சிங்காநல்லூர்* பகுதி கழக 54 வது வட்ட கழகம் சார்பாக பத்தாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிங்கைப் பகுதி கழக செயலாளர் அழகர் செந்தில்குமார்* முன்னிலையில் , 54 வட்டக் கழக செயலாளர் செல்வராஜ்* தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் வரும் பக்தர்களுக்கு கோவை மாநகர மாவட்ட கழக செயலாளர்
சிங்கைkசந்துரு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்கள். கோவை மாநகர மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் நீனா வேலுசாமி, மாவட்ட இணையதள அணி செயலாளர் கோவை சதீஷ் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்,

மேலும் விழாவிற்கு பகுதி கழக அவைத் தலைவர் சுரேஷ், ரவிச்சந்திரன், ஹஸன் பாய் ,மோகன், கேப்டன் ஆறுமுகம்,59 ஆவது வட்டக் கழக செயலாளர் அண்ணாதுரை, விக்னேஷ், பாலு, செந்தில் குமார், ரமேஷ் ,பழனிசாமி, அய்யனார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,