புதுக்கோட்டை மன்னர் மாட்சிமை தங்கிய ராஜகோபால தொண்டைமான் இந்திய அரசுடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைக்கும் பொழுது புதுக்கோட்டை நகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஏரி, குளங்கள் மற்றும் கோவில் நிலங்களை அரசுக்கு ஒப்படைக்கும் பொழுது கோவில் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு இந்து சமய அறநிலைத்துறையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகரில் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு கோவில் சொத்துக்கள் சில சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம், துணை நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டாலும் இந்து சமய அறநிலையத் துறையினர் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர். இது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் புதுக்கோட்டை நகர் சத்தியமூர்த்தி நகரில் 10 கோடி மதிப்பீட்டில் உள்ள Ts. 5354 நம்பரில் உள்ள சுமார் மூன்று ஏக்கர் கோவில் நிலம் இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறையில் இந்த கோவில் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோவிலானது இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது. வருவாய் துறை ஆவணங்களிலும் கோவில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆவண காப்பகத்திலும் கோவில் நிலம் என்று ஆவணங்கள் தெரிவித்துள்ளனர் ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கோவிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள இந்து சமய அறநிலைத்துறைக்குச்சொந்தமான கோவில் நிலத்தை மீட்க வழக்கு தொடங்கப்பட்டிருந்தும் இந்து சமய அறநிலைத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்தவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வருவது வேதனை அளிக்கிறது. இதுபோல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலை துறைக்குச் சொந்தமான கோவில் நிலங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
உடனடியாக TS.5354 சர்வே எண்ணில் சத்தியமூர்த்திநகரில் உள்ள அரசுக்கு சொந்தமான இந்த கோவில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதேபோல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமப்புகள் இருந்தால் அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்து சமய அறநிலைத்துறையினர் இதுபோல் தொடர்ந்து கோவில் நிலங்கள் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டால் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.




