• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திருமண மண்டபத்தில் திடீர் தீ விபத்து..,

ByKalamegam Viswanathan

Aug 23, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பகுதியில் சி எஸ் கே என்னும் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் திருமண மண்டபத்தில் உள்ள ஜெனரேட்டர் வயரில் இருந்து திடீரென தீப்பற்றி அருகே இருந்தால் சேர் மற்றும் டேபிள்கள் எரிய தொடங்கியது.

இது குறித்து தகவல் திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இன்று முகூர்த்த நாள் என்பதால் நேற்றைய தினம் திருமண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சம்பவம் தெரிந்த அடுத்த வினாடியே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு அப்பகுதி மக்கள் மிகுந்த பாராட்டினை தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினரின் துரித செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது சம்பவம் குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.