டாஸ்மாக் தொழிற்சங்கரனை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட வேலை நிறுத்த ஆயுத மாநாடு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்த ஆயுத்த மாநாட்டில் ஏராளமான டாஸ்மார்க் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்டு 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 8 மணி நேர வேலை, வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும், விற்பனை அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கை வரையறை செய்திட வேண்டும்,

உள்ளிட்ட டாஸ்மார்க் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழக அரசு நடப்பு நிதி நிலை கூட்டத் தொடரில் நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் போவதாய் என முடிவு செய்தப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.




