• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேனியில் ஆணி பிடுங்குதல், பனை நடவு பணியில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்குதல்

தேனி மாவட்ட தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பில் ஆணி பிடுங்குதல், பனை நடவு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா, தேனியில் நடந்தது.


தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யனாதன் விருது வழங்கினார். தன்னார்வலர்களுக்கு நம்மாழ்வார், கர்னல் ஜான் பென்னிகுவிக் விருதுகளும், தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் அமைப்பு, நன்செய் தன்னார்வ அமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசுமை செந்தில் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை கல்வி நிறுவனங்களின் பொதுச்செயலாளர் டி.ராஜ்மோகன் உட்பட தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.