இந்த வருடம்(2021) இதுவரையில் தியேட்டர்களில் 125 படங்கள், ஓடிடி தளங்களில் 40 படங்கள் வெளிவந்துள்ளது. வரும் வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 135ஐக் கடந்துவிடும்.
இவற்றில் இதுவரை 10% படங்கள் மட்டுமே வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்கள் மற்ற 90% படங்கள் வியாபார அடிப்படையில், வசூல் அடிப்படையில் தோல்விகளை சந்தித்த படங்களும், சுமாரான வசூல் கிடைத்த படங்களும் உள்ளன படைப்புரீதியாக பாராட்டப்பட்ட பல படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்த படங்களும் உண்டு.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே, சிலம்பரசன் நடிப்பில் மாநாடு, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், தனுஷ் நடிப்பில் கர்ணன் இவர்களில் வென்றவர்கள், தோற்றவர்கள் யார், வெற்றி படங்களை இயக்கிய அறிமுக இயக்குனர்கள், போன்ற சுவராஸ்யமான தகவல்களுடன் 2021 தமிழ் சினிமா சிறப்பு பார்வை கட்டுரை நாளை முதல் காலை 10 மணிக்கு அரசியல் டுடே வாசகர்களுக்காக வெளிவர இருக்கிறது படிக்கத் தவறாதீர்கள்இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை டிசம்பர் 31 அன்று வருகிறது
கடந்த வாரம் வெளியிட திட்டமிட்டு தியேட்டர் கிடைக்காமல் ஒத்திவைக்கப்பட்ட, ஏற்கனவே வெளியிட திட்டமிட்ட அடிப்படையில்13 திரைப் படங்கள் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இருப்பது 980 தியேட்டர்கள் இதில் ஏற்கனவே கடந்த வாரம் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு, ரைட்டர், படங்கள் 300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர வாய்ப்பு இருக்கிறது எஞ்சிய 600 திரையரங்குகளில் 13 படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் காட்சி அடிப்படையில் தான் படங்கள் வெளியாகும் தொடர்ந்து நான்கு காட்சி என்பது எந்தப் படத்திற்கும் கிடைக்காது கடைசிநேரத்தில் சில படங்கள் வராமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த வாரத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள்
டிசம்பர் 30
பிளான் பண்ணி பண்ணனும்
டிசம்பர் 31
1.இபிகோ 302
2.கனவுகள்
3.மணிக்குறவன்
4.மீண்டும்
5.சுடத்தான் வந்தியா
6.உங்களுக்காக
7.ஓணான்
8.பொண்ணு மாப்பிள்ளை
8.சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
9.சில்லாட்ட
10.தண்ணி வண்டி
11.தீர்ப்புகள் விற்கப்படும்
12.வேலன்
13.தீர்ப்புகள் விற்க்கப்படும்