• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து!நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள்..,

ByKalamegam Viswanathan

Aug 13, 2026

மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் அரசு பேருந்து அவுட்போஸ்ட் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் பின்னால் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டிவந்த இருவர் அரசு பேருந்து மீது மோதியது.

அரசு பேருந்தில் மாணாக்கர்கள் பயணித்துவந்த நிலையில் நல்வாய்ப்பாக மாணாக்கர்கள் காயமின்றி தப்பினர்.

உச்சகட்ட மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவிற்குள் இருந்து வெளியேற முடியாத அளவிற்கு போதையில் வெளியேற முடியாமல் தவித்ததோடு எவனையும் என்னை எதுவும் செய்ய முடியாது என கூறி சவால்விட்டபடி நின்றார்.

உச்சகட்ட மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவை இயக்கிய நிலையில் நல்வாய்ப்பாக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் தப்பினர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாநகர் பகுதியில் ஷேர்ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுநர்கள் தொடர்ந்து மதுபோதையிலும் கஞ்சா போதையிலும் வாகனங்களை இயக்குவதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஆளாகி வரும் நிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.