• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Dec 27, 2021

காலம் உயிர் போன்றது, அதை வீணாக்குவது
தன்னைத் தானே கொலை செய்து கொள்வதைப் போலாகும்.

நல்லொழுக்கம் தாழ்ந்த குலத்தவனை உயர் குலத்தோனாகவும்,
தீயொழுக்கம் உயர் குலத்தவனை இழிகுலத்தோனாகவும் ஆக்கும்.

அன்பு என்பது விலைக்கு வாங்கக்கூடிய ஒரு பொருளல்ல
விற்பனை செய்யக்கூடிய சரக்குமல்ல
உள்ளத்திலிருந்து தட்டுத் தடங்கலின்றி தானாகவே சுரந்து வரும்
விலை மதிக்கத்தக்க ஓர் உன்னத உணர்ச்சியாகும்.

ஒருவன் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு!
உன்னை புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு !

கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும்
தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை…