• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாவலர் சி.சூர்யா “இளைய சமூகமே எழுக” கவிதை நூல் அறிமுக விழா..,

ByKalamegam Viswanathan

Jul 19, 2026

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் வாசகர் வட்டத்தின் கேசம்பட்டி சி.ஜீவா வரவேற்புரை வழங்கினார். நாம் தமிழர் கட்சியின் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் நூலை வெளியிட்டார்.

தமிழர் மக்கள் இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தங்கம் அடைக்கன் நூலை பெற்றுக்கொண்டார்.நாம் தமிழர் கட்சியின் மேலூர்-2-ம் தொகுதி தலைவர் சாமிக்கண்ணு,நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிக்குமார்,நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மேற்கு மாவட்டச் செயலாளர் மரபு வேளாண் செயற்பாட்டாளர் கிருங்கை திருமாறன்,நாம் தமிழர் கட்சியின் பாண்டியராஜன்,சமூக செயற்பாட்டாளர்கள் ரா.தேவி,ஜாபர் அலி,அரிட்டாபட்டி பார்த்திபன்,வெள்ளக்காளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நூலாசிரியர் பாவலர் சி.சூர்யா ஏற்புரை வழங்கினார். ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார். பாரதிதாசன் வாசகர் வட்டம் நிகழ்வை ஒருங்கிணைத்தது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்கள் பங்கேற்றார்கள். துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்.