புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மகாதீபாரதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று வேப்பிலை அலங்காரம் என்பதால் அன்னப்பிரசாதம் ( கூல்) வழங்கப்பட்டது. முன்னதாக பெண்கள் தீபம் ஏற்றினார்கள். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




