• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

ByP.Thangapandi

Jul 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் வட்டாட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.,

இதில் பேசிய சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சென்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 25 கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்., அதில் 14 கோரிக்கைகளுக்கு பதில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.,
பட்டாசு சாலையில் போட வேண்டாம் எனவும் சென்ற கூட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடிப்பவர்கள்,பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அதன் போட்டோ வீடியோக்களை எடுத்து அனுப்பினால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தார்.,

இந்நிலையில் திருமண மண்டபம் உரிமையாளரை எச்சரித்தாகவும் மீறினால் வழக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.,
மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு மற்றும் பிளக்ஸ் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் போட்டோ அல்லது வீடியோவை எந்த இடம் என்று குறிப்பிட்டு அனுப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.,

தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு நகராட்சி அதிகாரிகள் பெரும்பாலான கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எவும் நகராட்சி சம்பந்தமான குறைகளை எடுத்துச் சொல்வதற்கு அதிகாரிகள் வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இன்று நகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்து சார் ஆட்சியர் எச்சரித்தால் பரபரப்பு ஏற்பட்டது., மேலும் நகராட்சி குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தார்பாய் போட்டு மூடப்பட்டு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அப்படி எடுத்துச் செல்லவில்லை என்றால் எனக்கு தகவல் தெரிவியுங்கள் என விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.,

மேலும் போத்தம்பட்டி கண்மாயில் நகராட்சி பகுதியிலுள்ள கோழிக்கடையினர் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.,

நகராட்சி பகுதியில் உள்ள தேனி சாலை முதல் நகராட்சி அலுவலகம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.,