புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காயம்பட்டி ஊராட்சியில் உள்ள மாங்கனாம்பட்டி ஊராட்சி சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிமுத்து என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில் அவர் மாங்கனாம் பட்டி மற்றும் காயாம்பட்டி ஊர்கள் அருகருகே இருக்கின்றன. இந்த நிலையில் காயாம்பட்டி ஊராட்சியில் உள்ள காளி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு கொடுத்து விட்டதன் பேரில் அது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த வகையில் அதே ஊராட்சியை சேர்ந்த சிலர் தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டார்கள். ஆனால் உண்மையில் அரசுக்கு சொந்தமான இந்த இடங்கள் பொதுவான நிலங்களாகத்தான் பராமரிக்க வேண்டும்.
அந்த இடங்களை தனியாருக்கு ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக கையூட்டுப் பெற்றுக் கொண்டு தனியாருக்கு கொடுத்து விட்டதால் அவர்கள் இப்போது ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் அகற்ற வேண்டும் என்று தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் கோவில் நிலங்கள் என்று தெரிந்திருந்தும் குறைந்த விலைக்கு யாரிடமோ பெற்றுக் கொண்டு இப்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதை இந்து அறநிலையத்துறையில் தமிழ்நாடு அரசும் இணைந்து அவர்களை எல்லாம் பின் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகள் எடுப்பதோடு தவறு செய்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொழுது மக்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக அரசு தான் இவ்வாறு இருந்தது என்றால் அதிமுக அரசும் அப்படித்தான் இருந்தது. அரசுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியர்களும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆக்கிரமிப்புகளும் அக்கிரமங்களும் குறையவில்லை. ஆட்சி மாறிவிட்டது நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் வந்து மனு கொடுத்தால் அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் மனுவை வாங்கி கையில் வைத்துக் கொண்டு போய் வாருங்கள் நடவடிக்கை பிற்பாடு எடுக்கலாம் என்று சொல்லி மக்களை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்களுக்கு எந்த வேலையும் செய்வதில்லை என்று வெறுப்போடு கூறினார்.




