மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். வீ கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“கல் தோன்றி மண் தோன்றாத காலத்தில் முன் தோன்றியமூத்த குடி தமிழ் குடி அந்த கொடி வழி உறவில் வந்தவர்கள் தான் இன்று உலகெங் கும் வசிக்கும் மானிடர்கள்.
இதில் ஒன்றை அடித்து ஒன்று வாழ்வது என்பது தான் வாழ்க்கை தத்துவம் . இந்த தத்துவத்தின் அடிப் படையில் இன்று வரை மாறாமல் இருப்பது இயற்கையில் தோன்றிய பல்லுயிர்கள் மட்டும் தான் என்றால் அது மிகையாகாது.
ஆனால் மனிதன் தன் சுற்றுப் புற சூழலுக்கு ஏற்றவாறு ஆறாம் அறி வான பகுத்தறிவு கொண்டு சிந்தித்து பல மாற்றங்களை உருவாக்கினான்.
அந்தக் காலமாற்றபடி வலிமை யுள்ளவன் எளியவனிடம் பயத்தை வரவழைந்து பின் அடிபணிய வைத்து குறுநில நிலபிரபுக்களாய் உருவாகி ஆட்சி கட்டிலில் அமர்ந்தான். அந்த ஆட்சி மன்னர் ஆட்சியாக மாறியது.

அந்த மன்னரையும் மதி இழக்க செய்து சாதி, மத, இன வேறுபாட்டை உருவாக்கி மூடநம்பிக்கையை மூல தனமாக்கி மத குருமார்கள் நிழல் வடிவில் ஆட்சி செய்தார்கள்.
உலகெங்கிலும் இந்த முறை தான் அன்று நடைமுறையில் இருந்து வந்தது. 1789 மே மாதம் 5ந்தேதி பிரெஞ்சுப் புரட்சி வெடித்து மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டி நில பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு மக்களாட்சி உருவானது.
அதன் பின் மக்களின் நலனுக் காக மக்களின் தேவையறிந்து,சேவை செய்கிற மனம் படைத்த ஒருவரை மக்களுக்குள் மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்துஆட்சி பீடத்தில் அமர வைத்துஅடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது கடமையாக கொண்டு கட்டுப்பாடுடன் ஆட்சியர்கள் நடத்தி கண்ணியம் காக்க வேண்டும் என்பதே மக்களாட்சி தத்துவமானது.
அதன் வழியில் தான் தமிழகத் திலும் ஆங்கில ஆட்சிக்கு பின்பு ஆண்டு வந்த ஆட்சியில் மீண்டும் மன்னராட்சி போல் வாரிசு அரசியல் தலை தூக்கியதால் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற நிலை உருவானது.
தமிழகத்தில் சாதி, மத, இன வேறு பாடின்றி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதிக்காகவும், பெண் அடிமைத் தனம் ஒழிக்க, மூடநம்பிக்கையை அழிக்க, ஈரோட்டில் வெண்தாடி வேந்தன் தந்தையை பெரியாரால் திராவிடர் கழகம் இயக்கமாக உருவாக்கப்பட்டது.
அதன்பின் வந்த திராவிட இயக்க வழி தோன்றல்கள் அவரது சித்தாந்தத்தையும் தத்துவத்தை கடைபிடிக்காமல் சுயநலத்திற்கு ஏற்றபடி மீண்டும் வாரிசு அரசியலை தலை தூக்க செய்தும், மதவாத அரசியலுக்கும் தன்னை அடிமைப்படுத்தி இருநிலையாளர் களாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.
இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் மாற்று ஒன்று வராதா என்று மக்கள் ஏங்கித் தவித்தனர். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவத்தின் அடிப்படையில் 2026 தேர்தலில் மாற்றத்தை கொண்டு வந்த மாசற்ற தலைவராக ஏழு வார்த்தையால் ஏழேழு தலைமுறையும் வியக்க வைத்து 2 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் திருக்குறள் போல சுருங்க கூறி பொருள் புரிய வைத்தும். பேச்சை குறை செயலைப் பெருக்கு என்ற தத்துவப்படிசமூக நீதி காவலர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் வழியின்படி கர்மவீரர் காமராஜர் ஆட்சியினை அரங்கேற்றி வீரமங்கை வேலுநாச்சியார்விவேக வீரத்துடனும் அஞ்சலையம்மாளின் தொண்டுள்ளபடி கொள்கை தலைவர்களாக கொண்டு இளைஞர்களின் மூன்றெழுத்து மந்திரம்சமூக நீதி அரசியலின் ராஜதந்திரம் இளைய தளபதிவிஜய் நல்லாட்சி புரிந்து வருகிறார்.
இன்றைய ஆட்சியில் சாதார ண எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள், மக்களின் பசி
பட்டினியை உணர்ந்த வர்கள்,ஏழை எளியோராக வாழ்ந்து வருபவர்களை சட்டமன்ற உறுப்பினர் களாக்கி அமைச்சர்களாகி அழகு பார்த்து ஏழை எளி யோருக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் அடிப்படை தேவை களான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் உள்ளவர்களை ளுக்கும் குடிநீர், வடிகால், மின்விளக்கு இவைகளில் பற்றாக்குறையில்லாத நிறைவினை ஏற்படுத்தி வருகிறார்.
லஞ்சம் ஊழல் ஒழித்து, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து நேர்வழியில்வீர நடைபோட்டு அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கச் செய்து வருகிறார். இந்நிலையில் இதுவரை பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த வர்களுக்கு அவர்களின் குடும்ப சூழ்நிலை வறுமை வாழ்வாதாரத் திற்கு ஏற்ப நிதி வழங்கி இருக்கலாம். அந்த நிதி அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டிருக்குமா என்றால் அது கேள்விக்குறியாகதான் இருக்கும்.
ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் பசியாற வேண்டுமா அவனுக்குமீனை கொடுக்காதே மீன்பிடிக்க கற்றுக் கொடு என்று ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி உள்ளது. அந்த பழமொழிக்கு ஏற்றபடி பாதிக்கப்பட்டோருக்கு தகுதி க்கு ஏற்றபடி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
இதுவரை எத்தனையோ ஆயிரம் பேருக்கு ஆட்சியாளர்கள் கருணை அடிப்படையில் வேலை வழங்குவது நடைமுறையில் உள்ளது தான் அதை வழங்கும் போது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப,பயனாளர்களுக்கு ஏற்பமாற்றம் செய்து கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.
மாற்றம் என்பது மானிட தத்துவம், மாற்றத்தை விரும்பாத, ஏமாற்றம் கண்டவர்கள் மட்டும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உரித் துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. உளறி திரிபவர் வார்த்தையில் என்றும் உருபடி தேறாது என்ற பாடலை கேட்டு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.




