• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பழமையான வேப்பமரம் வீட்டில் மேல் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தெற்கு தெரு பகுதியில் குடியிருப்பு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல பழமையான வேப்பமரம் இருந்துள்ளது.

ஏற்கனவே இந்த வேப்பமரம் ஒரு பகுதியாக சாய்ந்த நிலையில் இருந்துள்ளது வேப்பமரத்தை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற செயலாளரிடம் பல முறை புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் மரம் வேரோடு சாய்ந்ததால் குடிநீர் குழாயும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகச் சென்றது. வீரமணி என்பவர் வீட்டின் மீது சாய்ந்துள்ளது. இதில் வீட்டின் மேல் கூரை சிறிது சேதம் அடைந்தது அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த தகவல் இருந்து வந்த இராஜபாளையம் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர்.