• Sun. Jul 5th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராட்டம்.

ByKalamegam Viswanathan

Jul 5, 2026

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் இருந்து தினமும் 650 மெட்ரிக் டன் முதல் 750 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பை சேகரிக்கும் இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெள்ளக்கல் குப்பை கிடங்கில் சுமார் 100 ஏக்கரில் 5 கி.மீ. சுற்றளவில் பெரிய மலை போல் குப்பை தேங்கி உள்ளது.

இந்த குப்பை கிடங்கில் 16 கோடி கன மீட்டர் அளவுக்கு மேல் குப்பை தேங்கியுள்ளது. இதில் திடீரென இன்று பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை பெரியார் நிலைய தீயணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

தீ மேலும் வேகமாக பரவி வருவதாலும் காற்றின் அதிகமாக இருப்பதாலும் திருப்பரங்குன்றம் மற்றும் அனுப்ப நடிப்பு தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .மேலும் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் இரண்டும் கொண்டுவரப்பட்டு தீப்பரவும்இடங்களை கட்டுப்படுத்த தண்ணீர் தெளித்து வரப்படுகிறது.

மதுரை வெள்ளக்கடங்கு குப்பை கிடங்கில் தீ வேகமாக பரவி வருவது தொடர்ந்துதகவல் அறிந்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவகுமார் மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இகடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீ வேகமாக பரவி வருவதாலும் காற்றின் வேகம் அதிகரிப்பதாலும் அவனியாபுரம் வெள்ளக்கல் பெருங்குடி முத்துப்பட்டி சிந்தாமணி வரை ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது .