• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் ஆனி பிரம்மோற்சவ பெருந்திருவிழா திருத்தேரோட்டம்..,

ByK Kaliraj

Jun 30, 2026

சாத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏக்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாஜலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்கடாசலபதி துணைக்கோள் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருடன் நிகழ்வு நடைபெறும் அதேபோன்று ஆனி மாதம் பிரம்மோற்சவ பெருந்திருவிழா சுமார் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

திருவிழா சாத்தூர் பகுதியில் எதுவும் பிரசித்தி பெற்றது இதனால் சுற்றுவட்டார பகுதி ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டு ஆனி பிரமோற்சவ பெருந்திருவிழா கடந்த 22 ஆம்ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆனி பிரமோற்சவ பிறந்தநாள் வின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

திருத்தேரினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் சாத்தூர் வட்டாட்சியர் வடிவேலு உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

கோவிந்தா கோபாலா கோஷத்துடன் திருத்தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திருத்தேர் வலம் வரும் வீதிகளில் உடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.