தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம்தாகூர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவியை ஏற்றுக் கொண்டார்.இதனை கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில்

விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ் மற்றும் சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் தலைமையில் நகர காங்கிரஸ் கட்சியினர் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மகிலா காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் மாணிக்கம்தாகூர் ஆகிய இருவரின் உருவப்படத்திற்கு பாலாபிஷேகம், பண்ணீர் அபிஷேகம் நடத்திக் கொண்டாடினர்.

மேலும் சாத்தூர் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நகர் பகுதியில் செல்லும் வாகனங்களிலும் போக்குவரத்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



