• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…

ByKalamegam Viswanathan

Jun 22, 2026

மதுரை ஐராவதநல்லூர் வேலன் தெரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டு திறக்க முடியாமல் சிக்கி கொண்டார்

என்னை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளோர் அவரை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்தனர். ஆனால் பூட்டிய வீட்டில் சிக்கிய பெண்ணுக்கு கதவைத் திறக்க வழி தெரியவில்லை. அதனை தொடர்ந்து சென்னை நவீன கட்டுப்பாட்டறை மூலம் அனுப்பானடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இயந்திரங்கள் கடப்பாறை உள்ளிட்ட மீட்பு உபகரணங்களின் உதவியுடன் அறையின் கதவு திறக்கப்பட்டு, உள்ளே சிக்கியிருந்த சுமார் 35 வயது பெண் எந்தவித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார்.

பின்னர் அந்தப் பெண் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் துரிதமான செயல்பாட்டை பொதுமக்கள் பாராட்டினர்.