• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சின்னமனூர் பகுதியில் வி தி லீடர் அமைப்பில் சேர்ந்த பாஜகவினர்..,

தேனி மாவட்ட உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் தமிழகத்தில் அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வீ தி லீடர் அமைப்பில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி பொன் ஆனந்த் அவர்கள் தலைமையில் இணைந்தனர்.

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அஜித் இளங்கோ, முத்துவேல் மாவட்ட பிரச்சார பிரிவு துணைத் தலைவர் ராமசாமி மாவட்ட செயற்குழு முத்து மகாராஜா என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை வீ தீ லீடர் அமைப்பில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அவர்கள் கூறியதாவது தமிழகத்தில் பாஜக நகர மாவட்ட ஒன்றிய பொறுப்புகளில் இருந்து தங்களை விடுவித்து கொண்டு அண்ணாமலை அவர்களின் வீ தீ லீடர் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அண்ணாமலை நோக்கமானது லஞ்சம் ஊழலற்ற போதை வஸ்துகளை ஒழிக்கவும் நேர்மையான அரசாங்கத்தை கட்டமைப்பது அவருடைய நோக்கமாகும் இந்த கட்டமைப்பில் நாங்கள் ஒன்றிணைந்து 2031 இல் அண்ணாமலையின் ஆட்சி அமையும் இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.