காரைக்காலில் பிரகதிபாத யாத்திரை/விகாஸ் யாத்திரை உற்சாகமாக நடைபெற்றது. இதனை புதுச்சேரி அமைச்சர் ஜி எம் எஸ் ராஜசேகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், காரைக்காலில் இன்று பிரகதிபாத யாத்திரை / விகாஸ் யாத்திரை உற்சாகமாக நடைபெற்றது.
முன்னதாக, சமீபத்தில் புதுச்சேரி மாநில அமைச்சராக பதவியேற்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் காரைக்காலுக்கு வருகை தந்தார். அவரை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷி தாராட்டி மற்றும் மாவட்ட துணை ஆட்சியர் பூஜா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது இருவருக்கும் அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனைகள் குறித்த புத்தகங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய யாத்திரையில், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள்
ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை புதுச்சேரி மாநில அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மீனாட்சி சுந்தரம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதாராட்டி மற்றும் மாவட்ட துணை ஆட்சியர் பூஜா, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த யாத்திரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடங்கி பாரதியார் சாலை, கென்னடியார் சாலை, மாதா கோவில் வீதி வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சாதனைகள் அடங்கிய பதாகைகளை தாங்கிய வாகனத்தை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.




