• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேட்டி..,

ByP.Thangapandi

Jun 18, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இரா.தாஸ்.,

எங்களது கால் நூற்றாண்டு கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு, கடந்த அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருந்தாலும் அதற்கான வரைவு குழு வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்., இன்று தற்போதைய தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வரைவு குழுவை அறிவித்துள்ளது., அதற்கு இந்த அரசுக்கு நன்றியையும், வரவேற்பையும், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் எங்களது முழுமையான பென்சன் திட்டத்தை அறிவிப்பதாக தங்களது தேர்தல் வாக்குறுதியில் தற்போதைய முதல்வர் தெரிவித்தார் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

தற்போது அறிவித்துள்ள வரைவு குழு அறிவிப்பில் இறுதி முன்பணமும், பணிக் கொடையும் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது., இடைக்காலத்தின் நிலைப்பாடாக இருந்தாலும் அதை முழுமைப்படுத்தி தர வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ்நாடு முதல்வருக்கு கேட்டுக் கொள்கிறேன்.

நீண்ட நாள் கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை நீக்கிட வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளோம்.

இதே போல் பள்ளி கல்வித்துறை அமைச்சரையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்., அதை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்., என பேட்டியளித்தார்.