மும்பையில் இருந்து இன்று மதியம் 1:25 மணிக்கு புறப்பட்ட வீடியோ விமானம் மதுரை விமான நிலையத்தில் 3:25 மணிக்கு தரையிறங்க வேண்டும்.

மதுரையில் கடந்த சில மணி நேரமாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மதுரை விமான நிலைய ஓடுதள பாதையில் தரையிறங்க முடியாமல் மானாமதுரை அருகே வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

மதுரை விமான நிலையத்தில் திடீர் கன மழை மேக மூட்டம் வானிலை மாற்றம் காரணமாக கடந்த 20 நிமிடத்திற்கும் மேலாக இண்டிகோ விமானம் 165 பயணிகளுடன் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.



