மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள வேலம்மாள் ஜடா ஸ்கட்டர் ஹாலில் மூன்று நாள் ஒருங்கிணைந்த விவசாய தொழில் நுட்ப கண்காட்சி மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் இறுதி நாளான இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியை பார்வையிட்டார்.

ஒருங்கிணைந்த விவசாய தொழில் நுட்ப கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விவசாய கருவிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஒருங்கிணைந்த விவசாய தொழில்நுட்ப கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களான கிர்லோஸ்கர், இப்பென்ஸ் , ஸ்டேன்ஸ் ,உலவி போன்ற அமைப்புகள் உட்பட 215 அரங்குகள் இடம் பெற்றன.

ஒருங்கிணைந்த விவசாய தொழில்நுட்ப 3 நாள் கண்காட்சியில் மத்திய மாநில அரசுகளின் விவசாய மானியம், நவீன உற்பத்தி மற்றும் விற்பனை ஏற்றுமதி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விவசாய தொழில் நுட்ப கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர்,அனைத்து விவசாய பொருட்கள் வர்த்தக சங்க தலைவர் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கௌரவ ஆலோசகர் மதுரை உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர், மடிசியா தலைவர்,மதுரை மாவட்ட நுகர்பொருள் மொத்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
மேலும் இதில் வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், நிலையூர் கம்பிக்குடி விவசாயிகள் சங்கம்,தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.




