• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன்…

ByKalamegam Viswanathan

Jun 19, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அந்த முன்னாள் மாணவர், ஹாலோகிராம் (Hologram) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நேரில் வந்தது போன்ற 3D காட்சியை உருவாக்கி 6,7,8 படிக்கும் மாணவர்களுக்கு விளக்கினார். இதில் ஐன்ஸ்டீன் தமிழில் உரையாடுவது போல காட்சிப்படுத்தப்பட்டதும் மாணவர்களுக்கு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியது.

மேலும், நியூட்டன் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் இதே தொழில்நுட்பத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டதால், அறிவியல் பாடம் ஒரு திரைப்பட அனுபவம் போல் மாறியது என மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.