• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி..,

ByRadhakrishnan Thangaraj

Jun 18, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் புதிதாக தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அமைந்துள்ள அரசு மக்களுக்கு இடையூறாகவும் வழிபாட்டுத் தலங்கள் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 717 கடைகள் அகற்ற உத்தரவிட்டார்.

அந்த 717 டாஸ்மாக் கடைகளில் இவும் ஒன்று ஆனால் இந்த கடையை தற்போது வரை அகற்றாத நிலையில் சேத்தூர் பகுதியில் வருகிற 20-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் இன்று இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி தலைமையில் விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சேத்துர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹரிராம் RI காமராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஒரு மாத களத்தில் வேற இடம் பார்த்து டாஸ்மாக் மதுபான கடை அகற்றப்படும் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.