• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம்..,

ByS. SRIDHAR

Jun 17, 2026

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேற்றைய தினம் அவரது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில் இன்று காலை விராலிமலை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் மாவட்ட கழக அவைத்தலைவர் வி.இராமசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர கழக செயலாளர் , பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் என பெரும்பான்மையானோர் கொண்டுள்ளனர். இதில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் இந்த ஆலோசனை கூட்டம் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.