• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது …எடப்பாடி பழனிச்சாமி..,

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை.

சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது; 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தான் தமிழக வெற்றி கழகம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படுத்தி இருக்கிறார்.