• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பைக் பெட்ரோல் டேங்கில் மனைவியை உட்கார வைத்து ரிஸ்க் வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவு ஜோடி..,

ByKalamegam Viswanathan

Jun 17, 2026

மதுரையை சேர்ந்த காதல் திருமண ஜோடி ஒன்று தொடர்ந்து தங்களது இன்ஸ்டா பக்கத்தில் உனக்காக உயிரையோ கொடுப்பேன் என்ற வசனம் என ஏராளமான COUPLES வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இந்த வீடியோக்களில் பைக்கில் பைபாஸ் சாலையில் ஜோடியாக ஜெமினி ஜெமினி நெஞ்சில் காது வைத்து கவனி கவனி என்ற பாடலோடு கணவர் வாகனம் ஓட்ட பெட்ரோல் டேங்கில் மனைவியை அமரவைத்து ரீல்ஸ் ரிஸ்க் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதேபோன்று மதுரை மாநகர் கே.கே.நகர் வண்டியூர் பூங்கா சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் இருவரும் சர்றென்று அதிவேகமாக பைக் ஓட்டியபடி ஜோடியாக Couples வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டின் மன்மதனே வாராய் என்ற வசனத்தோடு அதிவேக பைக் ரேஸ் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதேபோன்று தேர்தல் நேரத்தில் ஸ்டாருங்க நாங்களும் ஓட்டுகேட்டா சாதிதான் யாரும் பார்ப்பதில்ல என்றும், புலி உறுமுது புலி உறுமுது என்ற பாடலோடு ரீல்ஸ் மூலமாக தவெகவிற்கு ஆதரவாக வீடியோவும் வெளியிட்டு தங்களை தவெக ஆதரவு ஜோடியாக காட்டிக்கொண்டனர்.

தொடர்ச்சியாக சீமான், திருமா, ஸ்டாலின், எடப்பாடி , உதயநிதி ஆகியோரை கேலி செய்யும் டயலாக்கோடு விஜயை உயர்த்தி மீம்ஸ் பாடல் போட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இது போன்ற Couples வீடியோவிற்காக தனியார் அமைப்புகள் விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளனர்

தங்களின் காதல் திருமண பாசத்தை காட்ட Couples வீடியோ போடுவது என்பது அவரவர்கள் விருப்பம் ஆனால் உயிர குடுப்பேன் உயிர குடுத்து காப்பாத்துவேன் என பஞ்ச் வீடியோலாம் போட்டுவிட்டு தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும், சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்துவது போல ஹெல்மெட் கூட அணியாமல் சில வீடியோக்களை எடுப்பது ஜோடிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடாதா ? என்ற கேள்விகளும் எழுகிறது.

தவெக ஆதரவு ஜோடிகளின் சில வீடியோக்கள் தங்களின் பாசத்தை வெளிப்படுத்தினாலும் பல வீடியோக்கள் ரிஸ்க் வீடியோக்களாக இருப்பதாக சமூகவலைதளவாசிகள் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

இதுபோன்ற ஜோடிக்களின் Couples வீடியோக்களை பார்த்து மற்ற ஜோடிகளும் வீடியோ எடுப்பார்கள் என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி தங்களின் பாதுகாப்பையும் கருதி உரிய பாதுகாப்புடன் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

மேலும் போக்குவரத்து காவல்துறையினர் இது போன்று சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிடும் நபர்களுக்கு முதலில் போக்குவரத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.