• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை..,

ByK Kaliraj

Jun 17, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் பாரதி நகர் பகுதியில் அதிகாலை முதல் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றது.

மது பாட்டில்களை கூட்டமாக கூடியிருந்த மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் பார் உரிமையாளர் மாயக்கண்ணன் மற்றும் காளிராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மண்டல துணை செயலாளர் மகாராஜா என்ற வல்லரசு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மகாராஜா என்ற வல்லரசுவை கைது செய்தனர். போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

இதனிடையே மது விற்பனை நடைபெற்ற இடத்தின் அருகே செயல்படும் தனியார் பாரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.