• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கட்டண கொள்ளை- பக்தர்கள் குமுறல்..,

ByKalamegam Viswanathan

Jun 17, 2026

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் மதுரை ரிங்ரோடு சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் நிலை மாலைக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலித்த பின்பே தரிசனத்திற்கு அனுமதிக்கும் கோவில் நிர்வாகத்தை பாரதிய இந்து எழுச்சி இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சிறப்பு தரிசனம் என்று தனியாக வசூலிக்கின்றனர்.

பொது தரிசனத்தில் நிலை மாலை கொண்டு செல்லும் பக்தர்களிடம் அராஜக முறையில் வசூல் செய்யும் கோவில் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கோவில்களுக்கு பொதுமக்கள் பக்தர்கள் பல கஷ்டங்களை போக்கவும் மனநிம்மதிக்காகவும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆனால் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் நிர்வாகமோ அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணம் என்கின்ற முறையில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலர் தங்களது ஆதங்கங்களை வெளிபடுத்தி உள்ளனர். பக்தர்கள் அதிகம் குவியும் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் இது போன்று அராஜக முறையில் வசூல் செய்யும் கோவில் நிர்வாகத்தின் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மதுரை காவல்துறை ஆணையாளருக்கும் புகார் மனு அளிக்க உள்ளோம்.

மேலும் பக்தர்களை துன்புறுத்தும் வகையில் கட்டணங்களை வசூலித்தால் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் மதுரை ரிங் ரோடு சாலையில் பாண்டி முனீஸ்வரர் கோவில் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.