கோவை துடியலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன் புதூர் நேதாஜி நகர் பகுதியில் நேற்று மதியம் சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் சாலையின் நடுவே பின்னிப் பிணைந்து நடனமாடியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன்களில் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இதே போன்று விளையாடி பின்பு அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்துள்ளன. பாம்புகள் இணை சேரும் நேரங்களில் அருகில் யார் உள்ளனர் என்பது அறியாமல் இது போன்று நடனமாடும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.




