• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மாணவர் ஆகாஷ் டெலிசனை கொலை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு..,

Byமுகமதி

Jun 15, 2026

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற பொறியியல் பட்டதாரி மாணவரை மானாமதுரை போலீசார் அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து கொலை செய்து இப்போது நூறு நாட்களைக் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் மீது எடுக்காமல் இருக்கிறது.

அவரது உடல் வாங்காமல் இன்றுவரை மருத்துவமனையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரை கொலை செய்த 16 காவல் துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவரது பெற்றோர் இதுவரை மகனது உடலை வாங்காமல் இருக்கிறார்கள். தொடர்ந்து மானாமதுரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் தினேஷ் கூறுகையில் அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தோழமை அமைப்புகளுடன் நெடுவாசல் திருமுருகன் வேம்பை சின்னத்துரை, உள்ளிட்ட பலரும் ஒன்று சேர்ந்து மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதை இங்கு மட்டும் அல்ல அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இன்று மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பின் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.